சர்தார் பட குழுவினருக்கு பிக்பாஸ் பிரபலம் ராஜூ வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகரான கார்த்தி தற்போது பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் சர்தார் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் ஹீரோயினாக ரக்ஷி கண்ணா நடித்திருக்கின்றார். மேலும் முக்கிய வேடத்தில் ரெஜிஷா விஜயன், லைலா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். மேலும் படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இத் திரைப்படமானது தீபாவளிக்கு திரையரங்கில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் சர்தார் திரைப்படத்தில் பிக்பாக்ஸ் பிரபல நடிகர் ராஜு நடித்து இருப்பதாக கூறப்பட்டு வந்தது. மேலும் விக்கிப்பீடியாவிலும் சர்தார் திரைப்படத்தின் நடிகர்கள் பட்டியலில் ராஜுவின் பெயர் இடம் பெற்றிருந்தன. இந்த நிலையில் சர்தார் திரைப் படத்தில் நான் நடிக்கவில்லை என ராஜு ஜெயமோகன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, எனக்கும் ஆசைதான். திரைப்படத்தில் நடிக்க விருப்பம்தான். ஆனால் அப்படி நடக்கவில்லை. ஆனா இதெல்லாம் கேட்கவும் பார்க்கவும் நல்லா இருக்கு. படத்தில் நான் இல்லை. சர்தார் மாபெரும் ஓபனிங் பெற மித்ரன் மற்றும் கார்த்தி உள்ளிட்டோருக்கு வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.