ஆர்யா நடிப்பில் உருவாகி உள்ள புதிய படம் ‘சார்பட்டா பரம்பரை’. இப்படத்தை பா.இரஞ்சித் இயக்கி உள்ளார். இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார். மேலும் பசுபதி, ஜான் விஜய், காளி வெங்கட், அனுபமா, கலையரசன், சந்தோஷ் பிரதாப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு முரளி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் ரிலீஸ் தேதியை இயக்குனர் பா.இரஞ்சித் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதன்படி சார்பட்டா பரம்பரை படத்தின் டிரெய்லர் நாளை பிற்பகல் 12 மணிக்கு வெளியாகும் என தெரிவித்துள்ளார். இப்படம் வருகிற ஜூலை 22-ந் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.