Categories
மாநில செய்திகள்

சர்ப்ரைஸ் கொடுத்த தமிழக அரசு…. மகிழ்ச்சியில் மாணவர்கள்…!!!!!

சிவகங்கை மன்னர் அரசு பள்ளி மைதானத்தில் சிவகங்கை புத்தகத் திருவிழா கோலாகலமாக கடந்த 15ஆம் தேதி தொடங்கியுள்ளது. இந்தப் புத்தகத் திருவிழாவை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியம், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் KR.பெரியகருப்பன் போன்றோர் தொடங்கி வைத்தனர்.

இதனை தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் புத்தகத் திருவிழா கண்காட்சியில் கலை, இலக்கியம், அறிவியல் சமூகம், சரித்திரம், நவீன இலக்கியம், கவிதை போன்ற 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலைப்புகளில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள், 110 அரங்குகளில் இடம்பெற இருக்கின்றன. மேலும் இதில் 100 அரங்குகளில் புத்தகக் கடைகளும், 10 அரங்குகளில் தமிழக அரசின் சாதனை விளக்கப் படங்களும் இடம் பெற்றிருக்கின்றன. இந்த புத்தக திருவிழா காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெற்று வருகிகின்றது.

மேலும் வரும் ஏப்ரல் 25ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்ற இவற்றை காண மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் இலவசமாக வந்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து இன்று சிவகங்கைமௌண்ட் லிட்ற ஜீ பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இந்ததிருவிழாவில் நூல் வெளியீடு பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் வாசிப்புத்திறன் இலக்கியப் பேச்சாளர் பட்டிமன்றம் போன்றவை நடைபெற்று வருகிறது.

புத்தக அரங்கம் அமைக்கப்பட்டிருக்கின்ற  விளையாட்டு மைதானத்தில் தமிழக தொல்லியல்துறை சார்பில் கீழடி அகழாய்வு பொருட்கள் கண்காட்சி  தனி அரங்கம் அமைக்கப்பட்டிருக்கிறது. மேலும் இதில் கீழடி அகழாய்வு போது கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்கள், உறைகிணறுகள், பழங்கால பொருட்கள் பொதுமக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்படிருக்கின்றன.

மேலும் ‘நொண்டி’ விளையாட்டில் பயன்படுத்தப்படும் வட்டச்சில்லுகள், தாய விளையாட்டுக்கான பகடைக்காய்கள், சதுரங்கக் காய்களும் தங்கத்திலான ஏழு ஆபரணத் துண்டுகள், செம்பு அணிகலன்கள், கல்மணிகள், கண்ணாடி மணிகள், பளிங்கு கல் மணிகள், சங்கு வளையல்கள், தந்த வளையல்கள் போன்றவையும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.உலகின் முற்பட்ட நாகரிகங்களில் ஒன்று நமது என்பதையும், இந்திய வரலாற்றைத் தெற்கிலிருந்து பார்க்க வேண்டும் என்பதையும் மேலும் உறுதிப்படுத்தும் களம் ஆகியுள்ளது கீழடி. இதனால் மாணவ,மாணவிகள் இதனை  ஆர்வமுடன் பார்த்து  வருகின்றனர்.

Categories

Tech |