ஆந்திர மாநிலம் அனேக பள்ளிப் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி புஷ்பா. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணா என்ற வாலிபருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இந்நிலையில் திருமணத்தை முன்னிட்டு சப்ரைஸ் கொடுப்பதாக கூறி ராமகிருஷ்ணரை மலைப்பகுதி ஒன்றிற்கு புஷ்பா வரவழைத்துள்ளார். அப்போதுகிப்ட் கொடுப்பதாக கூறி அவரது கண்களை தனது துப்பட்டாவால் கட்டியுள்ளார். பிறகு தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரின் கழுத்தில் குத்தி கொலை செய்ய முயற்சித்துள்ளார்.
இதில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த ராமகிருஷ்ணா வலியில் துடித்தார். இதை பார்த்து மனம் வருந்திய புஷ்ப அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அப்போது மருத்துவரிடம் மலைப்பகுதியில் செல்லும்போது அவர் கீழே விழுந்து காயம் ஏற்பட்டது என்று கூறினார். ஆனால் அவரின் பேச்சில் சந்தேகம் அடைந்த மருத்துவர்கள் அருகில் உள்ள காவல் துறையினருக்கு புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் அங்கு வந்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை செய்தபோது, திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லாததால் அவரை கொலை செய்ய முயற்சித்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதையடுத்து போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.