Categories
மாநில செய்திகள்

சர்ரென்று எகிறிய விலை…! அலற விடும் தக்காளி… ரூ.140க்கு விற்பனை …!!

சென்னையில் காய்கறிகளின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இன்று 1 கிலோ தக்காளி 130 ரூபாய் முதல் 140 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துருக்கிறார்கள்.

கனமழை காரணமாக தமிழகம் மற்றும் ஆந்திராவில் காய்கறிகளின் விளைச்சல் கடும் பாதிப்பை சந்தித்தது. இதன் விளைவால் சென்னை கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகளின் வரத்து குறைந்து அதன் விலை அதிகரித்துள்ளது.காய்றிகளின் வரத்துக்கேட்ப அதன் விலைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் சென்னையில் இன்று 1 கிலோ தக்காளி விலை 140 ரூபாயாக உள்ளது. இதைப்போன்று வெங்காயம் கிலோ 40 ரூபாய் அதிகரித்துள்ள நிலையில் பீன்ஸ், வெண்டைக்காய் போன்ற காய்கறிகளின் விலை சற்று குறைந்துள்ளது.

எனினும் தக்காளி வரத்து குறைந்துள்ளதால் அதன் விலை மட்டும் அதிகரித்துள்ளதாகவும், வரத்தைப் பொறுத்து அதன் விலை குறைய வாய்ப்பு உள்ளதாகவும், வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதைப்போன்று புதுச்சேரியிலும் காய்கறி விலைகள் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதன்படி 1 கிலோ தக்காளி 100 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

Categories

Tech |