Categories
உலக செய்திகள்

“சர்வதேச அமைப்புகளுக்கு அழைப்பு”… புகழ்பெற்ற ஈரான் நடிகை கைது… ஏன் தெரியுமா…?

ஈரானில் கடந்த செப்டம்பர் மாதம் ஹிஜாப் விவகாரத்தில் அரசுக்கு எதிராக பெரும் போராட்டம் வெடித்தது. இந்தப் போராட்டத்தை அரசு இரும்பு கரம் கொண்டு ஒதுக்கியதில் 500-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட 18,000 பேரை கைது செய்த நிலையில் அவர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு கடுமையான தண்டனை விதிக்கப்பட்டுவருகிறது. அதன்படி போராட்டத்தின் போது பாதுகாப்பு படை வீரர்களை கத்தியால் குத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட இரண்டு பேருக்கு சமீபத்தில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டிருந்தது.

இது சர்வதேச அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஈரானைச் சேர்ந்த புகழ்பெற்ற நடிகை தாரனே அரிதூஸ்டி போராட்டக்காரர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதை கண்டித்தும், அரசுக்கு எதிரான போராட்டத்தை ஆதரித்தும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த வாரம் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் “சர்வதேச அமைப்புகளுக்கு ஈரானின் மரண தண்டனைக்கு எதிராக பேசும்படி அழைப்பு” விடுத்துள்ளார். போராட்டம் குறித்து பொய்யான தகவல்களை பரப்பியதாக குற்றம் சாட்டி நடிகை தாரனேவை நேற்று ஈரான் போலீசார்  கைது செய்துள்ளனர்.

Categories

Tech |