பிரைநோபிரைன் கிட்ஸ் அகாடமி நடத்திய சர்வதேசஅபாகஸ் போட்டியில் செங்கோட்டை டிரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி மாணவ-மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.
பிரைநோபிரைன் கிட்ஸ் அகாடமி நடத்திய சர்வதேச அளவிலான அபாகஸ் போட்டி இணையதளத்தில் நடந்துள்ளது. இந்த பொட்டியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்ட நிலையில் தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள விஸ்வநாதபுரம் டிரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி மாணவ-மாணவிகள் இதில் பங்கேற்றனர்.
இந்நிலையில் இந்த பள்ளி மாணவர்கள் ஷேக் உசைன் ஆறாம்வகுப்பு மாணவனும், ஹாரூன் ரஷீத் இரண்டாம் வகுப்பு மாணவனும் தங்கப்பதக்கம் வென்றனர். அதேபோன்று சமீரா பாத்திமா இரண்டாம்வகுப்பு மாணவி, மினா சுல்பியா ஆறாம்வகுப்பு மாணவி , அமீரா பாத்திமா ஐந்தாம் வகுப்பு மாணவி,முகமது உசேன் ஆறாம் வகுப்பு மாணவன், ஆகியோர் வெள்ளிப்பதக்கம் பெற்று சாதனை படைத்தனர். இவர்களை பள்ளி தாளாளர் டாக்டர் ஷேக் செய்யது அலி, பள்ளி முதல்வர் சமீமா பர்வீன் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.