சர்வதேச அளவிலான 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த போட்டியை தொடர்ந்து தற்போது சர்வதேச அளவிலான மகளிர் டென்னிஸ் போட்டி சென்னையில் நடைபெற இருக்கிறது. கடந்த 21 வருடங்களாக ஏடிபி ஆண்கள் டென்னிஸ் போட்டி சென்னையில் நடைபெற்றது. அதன் பிறகு கடந்த 2018-ஆம் ஆண்டு புனேவுக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் சர்வதேச அளவிலான மகளிர் டென்னிஸ் போட்டி சென்னையில் முதன்முதலாக நுங்கம்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெற இருக்கிறது.
இந்த டென்னிஸ் போட்டியை செஸ் ஒலிம்பியாட் போட்டி போன்று மிக பிரம்மாண்டமாக நடத்துவதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த போட்டி செப்டம்பர் 12 முதல் 18-ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் டென்னிஸ் போட்டியை சிறப்பாக நடத்துவதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளார். மேலும் சர்வதேச அளவிலான மகளிர் டென்னிஸ் போட்டி சோனி லைவ் சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும்.