கடந்த ஒரு மாத காலமாக ரஷ்யா, உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரைனும் பதில் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையே உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, தனது நாட்டிற்கு சர்வதேச அளவில் ஆதரவு திரட்டும் பொருட்டு காணொலி வாயிலாக ஐரோப்பிய நாடுகளின் பாராளுமன்றங்களில் உரையாற்றி வருகிறார்.
அந்த வகையில் அதிபர் ஜெலன்ஸ்கி கத்தாரின் தோகா மன்றத்தில் உரையாற்றிய போது, “எரிசக்தி வளம் மிக்க நாடுகள் தங்களுடைய உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டும். இந்த நடவடிக்கையினை ரஷ்யாவின் எரிசக்தி வினியோக இழப்புக்கு ஈடு செய்யும் வகையில் மேற்கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.