Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“சர்வதேச அளவில் தரம் உயர்த்தப்படும் ரயில் நிலையங்கள்” காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கும் பிரதமர்….!!!!

ரயில் நிலைய மேம்பாட்டு பணிகளை பிரதமர்  தொடங்கி வைக்கிறார்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடியில் 150 ஆண்டுகள் பழமையான ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையத்தில் இருந்து  தினமும் 30 ஆயிரம் பயணிகள் பல்வேறு இடங்களுக்கு செல்கின்றனர். இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள 50 ரயில் நிலையங்களை சர்வதேச அளவுக்கு தரம் உயர்த்த மத்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. அதற்காக  தமிழ்நாட்டில் உள்ள காட்பாடி, சென்னை எழும்பூர், மதுரை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி ஆகிய 5 ரயில் நிலையங்கள்  தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக 2000 கோடி ரூபாய்  நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வருகிற 26-ஆம் தேதி காட்பாடி ரயில் நிலையத்தில் 375 கோடி ரூபாய் மதிப்பீட்டில்  மேம்பாட்டு பணிகள் தொடங்குகிறது. இதனை பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். இந்த ரயில் நிலையத்தில் பார்க்கிங் வசதி, கூடுதல் டிக்கெட் கவுண்டர்கள், ஓய்வு அறை, கழிவறை ஆகிய வசதிகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |