சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து அயர்லாந்து கிரிக்கெட்அணியின் ஆல்ரவுண்டர் மற்றும் நம்பிக்கையான நாயகனான கெவின் ஓபிரையன் ஓய்வுபெற்றார். கெவின் ஓ பிரைன்(38) 153 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 3619 ரன்களும், 110 டி20 போட்டிகளில் விளையாடி 1973 ரன்களும் அடித்து எடுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர்த்து ஒருநாள் போட்டிகளில் 114 விக்கெட்டுகளையும், டி20 போட்டிகளில் 58 விக்கெட்களையும் கைப்பற்றி இருக்கிறார். கடந்த 2011 ஆம் வருடம் நடந்த உலககோப்பை தொடரின் கெவின், 50 பந்துகளில் சதமடித்து அசத்தினார். இந்த சதம் உலக கோப்பை தொடரில் அதிவேகமான சதமாக இன்றளவும் நீடித்து வருகிறது. அப்போட்டியில் அயர்லாந்தை வெற்றி பெற வைத்தது அவரது மறக்கமுடியாத ஆட்டங்களில் ஒன்றாகும்.
சென்ற வருடம் நடந்த டி20 உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தின் போது நமிபியாவுக்கு எதிராக விளையாடியதே கெவின் ஆடிய கடைசி சர்வதேச அளவிலான போட்டி ஆகும். ஓபனிங்கில் தொடர்ந்து களமிறங்கி ஆடிய போதும் அவரால் எதிர்பார்த்த ஆட்டத்தை வெளிப்படுத்த இயலவில்லை. அதன்பின் அவர் அணியில் விளையாட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்த நிலையில் கெவின் ஓ பிரையன் தன் ஓய்வுமுடிவை அறிவித்து இருக்கிறார். அயர்லாந்துக்காக விளையாடிய ஒவ்வொரு நிமிடத்தையும் ரசித்ததாகவும், ஆடுகளத்திற்கு வெளியே பல்வேறு நண்பர்களை உருவாக்கியதாகவும் அவர் கூறியுள்ளார். அத்துடன் தேசிய அணிக்காக விளையாடிய காலத்தில் பல்வேறு மகிழ்ச்சியான நினைவுகள் இருப்பதாக கூறிய அவர், தனக்கு இது நாள் வரையிலும் ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.