Categories
கிரிக்கெட் விளையாட்டு

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு….!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடருக்கு பிறகு மகேந்திர சிங் தோனி எந்தவிதமான கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்கவில்லை. இதையடுத்து அவரின் ஓய்வு குறித்த பல வதந்திகள் வந்த நிலையில் ஐபிஎல் போட்டியில் மட்டும் கவனம் செலுத்தி பயிற்சி மேற்கொண்டு வந்தார். கொரோனா வேகமாக பரவி வந்ததால் ஐபிஎல் போட்டி ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் தோனியின் கிரிக்கெட் எதிர்காலம் குறித்து ஏராளமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு, தோனியின் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டது, அவர் ஓய்வு அறிவித்து விடுவார் என்றெல்லாம் சொல்லப்பட்டு வந்தது.

இந்நிலையில் ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. செப்டம்பர் 19 இல் தொடங்கி நவம்பர் 10ஆம் தேதி வரை ஐபிஎல் போட்டி நடைபெறும் என பிசிசிஐ அறிவிப்பு வெளியிட்டது. இதில் பங்கேற்க ஐபிஎல் அணிகள் ஆகஸ்ட் மாத இறுதியில் துபாய் செல்ல செல்வதற்கு திட்டமிட்டிருந்தனர். இதனால் ஆகஸ்ட் 16 முதல் 20 ஆம் தேதி வரை சென்னை அணியினர் சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி மேற்கொள்ள திட்டமிட்டு, அட்டவணைப் படுத்தப்பட்டுள்ளது.

dhoni-announced-retirement-from-international-cricket

பயிற்சியில் பங்கேற்க வீரர்கள் அனைவரும் நேற்று விமானம் மூலமாக சென்னை வந்தனர். மகேந்திர சிங் தோனியும் சென்னை வந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்திருந்தனர். இந்த நிலையில்தான் நாட்டின் 74வது சுந்தர் தினமான நேற்று சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக மகேந்திரசிங் தோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்திருந்தார். தோனியின் தீடீர்  அறிவிப்பு ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ள தோனி,  இதுவரை அளித்த அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. 19.29 மணியிலிருந்து நான் ஓய்வு பெறுவதாக எடுத்துக் கொள்ளுங்கள் என பதிவிட்டுள்ளார். அத்துடன் இணைத்து கடந்த 2004 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை களத்தில் உடன் ஆடிய வீரர்கள் உடனான புகைப்படங்கள் அடங்கிய வீடியோவையும் கேப்டன் தோனி பகிர்ந்துள்ளார். தோனியின் ஓய்வை ஏற்றுக்கொள்ள முடியாத ரசிகர்கள் ஹேஷ்டாக் முதல் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

https://www.instagram.com/tv/CD6ZQn1lGBi/?utm_source=ig_web_copy_link

Categories

Tech |