ஐசிசி எனப்படும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பல விதிகளை அதிரடியாக மாற்றி இருக்கிறது. இதன் வாயிலாக போட்டி மும்முரமாக மாறும் என ஐசிசி நம்பிக்கை தெரிவித்து உள்ளது. கங்குலி தலைமையிலான எம்.சி.சி. குழு இம்மாற்றத்தை செய்துள்ளது. வருகிற அக்டோபர் 1 ஆம் தேதி முதல் இம்மாற்றம் வரவுள்ளது. கொரோனா காலக்கட்டத்தில் பந்தில் எச்சில் வைத்து தடவகூடாது. இத்தடை 2 வருடங்கள் தொடரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது இந்த தடை எப்போதும் தொடரும் என ஐசிசி அறிவித்துள்ளது. இதன் மூலமாக பந்துவீச்சாளர்கள், ரிவர்ஸ் ஸ்விங் செய்வது மிகவும் கடினமாக மாறிவிடும்.
இதேபோல் போட்டியை மும்முரமாக வைத்துகொள்ள புது விதியை ஐசிசி அறிவித்துள்ளது. அந்த வகையில் விக்கெட் விழுந்ததும் அடுத்த பேட்ஸ்மேன்கள் 2 நிமிடத்திற்குள் களத்திற்கு வரவேண்டும். இதேபோல் டி20 போட்டிகளில் 90 விநாடிக்குள் அடுத்த பேட்ஸ்மேன் களத்துக்கு வரவேண்டும். பேட்ஸ்மேன் கேட்ச்சாகி அவுட்டாகும்போது புது பேட்ஸ்மேன் தான் அடுத்த பந்தை எதிர்கொள்ள வேண்டும். பழைய முறைப் படி, புதிய பேட்ஸ்மேன் கேட்சாகி அவுட்டாகும் தருணத்தில் எதிரே உள்ள பேட்ஸ்மேன் அவரை தாண்டி ரன் ஓடி இருந்தால், அவரே அடுத்த பந்தை பிடிக்கும் விதியிருந்தது. இப்போது அது ஒழிக்கப்பட்டுள்ளது.
பழைய விதியின் அடிப்படையில் பந்து 2, 3பிட்ச்களாகி பேட்டிற்கு வந்தால் அதை நடுவர் டெட் பால் என அறிவிப்பார். தற்போது அது நோபால் என அறிவிக்கப்படும். அதுமட்டுமின்றி பந்துவீசும் முன்பு பேட்ஸ்மேன் கோட்டைவிட்டு நகர்ந்தால், அப்போது எந்த வித எச்சரிக்கையுமின்றி ரன்அவுட் செய்ய புது விதி அனுமதிக்கப்படுகிறது. பேட்ஸ்மேன் பந்தை எதிர்கொள்ளும் தருணத்தில் பில்டர்கள், வேறு இடத்திற்கு மாற முயற்சிசெய்தால் , அது டேட் பால் என அறிவிக்கப்பட்டு 5 ரன்கள் பெனால்டி விதிக்கப்படும். இதேபோல் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் ஓவர்களை வீசி முடிக்கவில்லை எனில், பவுண்டரி எல்லையில் ஒரு பில்டர்களை குறைக்கும் விதி இனிமேல் அடுத்த வருடம் முதல் ஒரு நாள் போட்டியிலும் பின்பற்றப்படும்.