Categories
குத்து சண்டை விளையாட்டு

சர்வதேச குத்துச்சண்டை போட்டி: இந்தியாவுக்கு பெருமை சேர்த்த “வீராங்கனைகள்”…. இறுதிப்போட்டிக்குள் நுழைவு…!!

பல்கேரியாவின் சோபியா நகரில் நடைபெற்று வரும் 73 ஆவது ஸ்ட்ராண்ட்ஜா நினைவு சர்வதேச குத்துச்சண்டை போட்டியின் இறுதிப்போட்டிக்குள் இந்திய வீராங்கனைகள் இருவர் முன்னேறியுள்ளார்கள்.

பல்கேரியாவின் சோபியா நகரில் 73 ஆவது ஸ்ட்ராண்ட்ஜா நினைவு சர்வதேச குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான 52 கிலோ எடை பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் நிஹாத் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளார். இதில் இவர் துருக்கியை சேர்ந்த நாஸ் என்பவரை வீழ்த்தியுள்ளார்.

அதேபோல் மற்றொரு இந்திய வீராங்கனை நித்து 48 கிலோ பிரிவில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். இதில் இவர் உக்ரைனை சேர்ந்த ஹன்னா என்பவரை வீழ்த்தியுள்ளார். இவ்வாறு இந்திய வீராங்கனைகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியதன் மூலம் அவர்களுக்கு குறைந்தது வெள்ளிப்பதக்கம் கிடைப்பது உறுதியாகியுள்ளது.

Categories

Tech |