சர்வதேச அளவிலான கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி வினியோகிக்கும் திட்டத்தில் சீனா தற்போது ஒன்றிணைந்துள்ளது.
உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி சர்வதேச அளவில் தயாரிக்கப்பட்டு அதனை வினியோகிக்கும் திட்டம் கோவேக்ஸ் என்ற பெயரில் உருவாக்கப்பட்டிருக்கிறது.அந்த மிகப்பெரிய திட்டத்தை உலக சுகாதார நிறுவனம் மற்றும் காவி தடுப்பூசி கூட்டணி ஆகியவை ஒன்றிணைந்து நிர்வகித்து வருகிறது. மேலும் அந்தத் திட்டத்தில் கருணா தடுப்பூசியின் பொதுவான தேடலில் பல்வேறு நாடுகள் இணைந்துள்ளன. இந்த நிலையில், அந்த சர்வதேச தடுப்பூசித் திட்டத்தில் சீனா தற்போது முறைப்படி இணைந்துள்ளது.
இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “கடந்த அக்டோபர் எட்டாம் தேதி சீனா மற்றும் காவி தடுப்பூசி கூட்டணி ஆகியவை கோவேக்ஸ்-ஐ அணுகுவதற்கு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டன. இது ஒரு மிக முக்கியமான படியாகும். கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை ஒட்டுமொத்தமாக பொதுநலன் ஆக மற்றும் வாக்குறுதியின் ஒரு பகுதியாக சீனா இதனை செய்துள்ளது”என்று அவர் கூறியுள்ளார்.