Categories
மாநில செய்திகள்

சர்வதேச செவிலியர் தினம்…. டிடிவி தினகரன் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்….!!!!

செவிலியர் புளோரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த நாளான மே 12 அன்று ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச செவிலியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. உலகில் சுமார் 3 கோடி செவிலியர்கள் உள்ளனர். இந்தியாவில் ஆண்டுக்கு 60,000 பேர் செவிலியர் பயிற்சி முடிக்கின்றனர். மேலும் கொரோனாவுக்கு எதிரான போரில் முன்கள பணியாளர்களாக முன் நின்று போராடும் மருத்துவர்கள் செவிலியர்களுக்கு வாழ்த்துக்கள்.

இதனையடுத்து மருத்துவத் துறையில் மகத்தான பணியாற்றும் செவிலியர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த செவிலியர் தின வாழ்த்துக்கள் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். மேலும் கார்பஸ் பண்ட் நிதியை உருவாக்க வேண்டும். மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மத்திய அரசு வழங்குவதற்கு இணையான ஊதியத்தை தமிழக அரசும் வழங்கிட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

Categories

Tech |