ஸ்பெயின் நாட்டியில் நடைபெற்ற 48-வது லா ரோடா என்ற சர்வதேச ஓபன் செஸ் போட்டி நடைபெற்றுள்ளது. அப்போட்டியில் தமிழகத்தை சேர்ந்த இளம் வீரர் குகேஷ் முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.
மேலும் இந்த போட்டியில் சென்னையைச் சேர்ந்த பிரபல இளம் வீரர் பிரக்ஞானந்தா மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார். அந்த வகையில் செஸ் வரலாற்றில் மிகக் குறைந்த வயதான, 15 வயது நிரம்பிய குகேஷ் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற மூன்றாவது வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.