டி20 அணிகள் தரவரிசையில் இந்தியா 268 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்தது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து ஆஸ்திரேலியா அணி 3 போட்டியில் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது. இதில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவும், 8ஓவர்களாக நடைபெற்ற 2ஆவது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றது. எனவே இரு அணிகளும் 1-1 என்று சமநிலையில் இருந்தது. இந்நிலையில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கடைசி 3ஆவது டி20 போட்டி ஹைதராபாத் ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது..
அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 186 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணியில் கேப்டன் ரோஹித் மற்றும் கேஎல் ராகுல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும், விராட் கோலி(63) மற்றும் சூரியகுமார் யாதவ்(69) அதிரடியாக ஆடியதால் 19.5 ஓவரில் 187/4 ரன்கள் எடுத்து வென்றது.. இதனால் ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
இந்த மூன்றாவது டி20ஐ போட்டியில் ஆஸ்திரேலியாவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்ததால் ஒரு காலண்டர் ஆண்டில் அதிக டி20ஐ வெற்றிகளை (21) பெற்று உலக சாதனை படைத்தது. இதற்கு முன் 2021 காலண்டர் ஆண்டில் 20 டி20ஐ போட்டிகளை வென்று பாகிஸ்தான் உலக சாதனையாக வைத்திருந்தது.
இந்நிலையில் இந்த வெற்றியோடு டி20 அணிகள் தரவரிசையில் இந்தியா 268 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்தது. இதற்கிடையில், ஆஸ்திரேலியா இப்போது 250 ரேட்டிங் புள்ளிகளுடன் 6ஆவது இடத்தில் உள்ளது. இங்கிலாந்து 261 புள்ளிகளுடன் 2ஆவது இடத்தில் உள்ளது. தென்னாப்பிரிக்கா 258 புள்ளிகளுடன் 3ஆவது இடத்திலும், பாகிஸ்தான் 258 புள்ளிகளுடன் 4ஆவது இடத்திலும், நியூசிலாந்து 252 புள்ளிகளுடன் 5ஆவது இடத்திலும் இருக்கிறது..
How do the T20I team rankings look after India's record win?https://t.co/njWiGzxVxh pic.twitter.com/aW3GVvpAXG
— Tyagi Community ⚔ 🚩 (@Tyagi_Community) September 26, 2022
India retains the number one spot in the latest ICC T20I Team rankings while England and South Africa grabbed second and third positions respectively. pic.twitter.com/dJNsDeVxjK
— RAJA SPORT News (@RAJASPORTNews1) September 26, 2022