Categories
உலக செய்திகள்

சர்வதேச நாணய நிதியத்திடம் அவசர உதவி….!! இலங்கை நிதி மந்திரி கோரிக்கை…!!

கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இலங்கை கடும் நிதி பற்றாக்குறை மற்றும் கடன் சுமையில் தத்தளித்து வருகிறது. இந்நிலையில் நிலைமையை சீராக்க இலங்கை அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வரிசையில் சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை அரசு உதவி கோரியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் உடனான இலங்கையின் பேச்சுவார்த்தை நேற்று தொடங்கியுள்ளது. இதற்காக இலங்கையின் நிதி மந்திரி அலி சப்ரி தலைமையிலான அதிகாரிகள் வாஷிங்டன் சென்றுள்ளனர். இந்த பேச்சுவார்த்தையில் இலங்கையின் அண்டை நாடான இந்தியாவின் பிரதிநிதித்துவத்திற்கு பிறகே இலங்கைக்கு நிதி வழங்குவது தொடர்பாக சர்வதேச நாணய நிதியம் பரிசீலிக்கும் என தெரிவித்துள்ளது.

Categories

Tech |