துபாய் நகரில் காலை 10 முதல் மாலை 6 மணி வரை மேம்பாடு தொடர்பான மற்றும் சர்வதேச மனிதாபிமான உதவி கண்காட்சி நடைபெற்று வருகிறது.
துபாய் நகரில் உள்ள உலக வர்த்தக மையத்தில் நேற்று மேம்பாடு தொடர்பான மற்றும் சர்வதேச மனிதாபிமான உதவி கண்காட்சி தொடங்கியது. இந்நிலையில் 18 ஆண்டுகளாக நடைபெறும் இந்த கண்காட்சியில் அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், நைஜீரியா, இந்தியா, இஸ்ரேல் உள்ளிட்ட 9 நாடுகளைச் சேர்ந்த சர்வதேச மனிதாபிமான உதவி அமைப்பு நிறுவனங்கள். மேலும் 600க்கும் மேற்பட்ட சர்வதேச அளவிலான தன்னார்வ தொண்டு அமைப்புகள் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து 50-க்கும் மேற்பட்ட வல்லுனர்கள் இந்த ஆண்டு ‘ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சி இலக்குகள்’ என்ற தலைப்பில் கருத்தரங்கில் உரையாற்றுகின்றனர். இந்த நிலையில் துபாய் அரசின் தகவல் தொடர்பு துறை பொது இயக்குனர் ஷேக் ஹசர் மற்றும் மக்தூம் அல் மக்தூம் இவர்கள் இணைந்து இந்த கண்காட்சி மற்றும் கருத்தரங்கை தொடங்கி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து செஞ்சிலுவை சங்கம், துபாய் சர்வதேச மனிதாபிமான நகரம், ஐக்கிய நாடுகள் சபை, துபாய் இஸ்லாமிய விவகார, செம்பிறை சங்கம் தொண்டு உரை உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் இந்த கண்காட்சியில் இடம் பெற்றுள்ள அரங்குகளை பார்வையிட்டனர். மேலும் அதிகாரிகள் அந்த பணிகளுக்கு எந்த வகையான உதவிகளை வழங்கிறது மற்றும் எத்தகைய மனிதாபிமான பணிகளை மேற்கொள்கின்றது என்பது குறித்து விவரித்தனர். இந்த நிலையில் காலை 10 முதல் மாலை 6 மணி வரையில் நடக்கும் இந்த கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நாளை நிறைவடைகிறது.