1971ஆம் ஆண்டு, ஈரான் நாட்டின் கரீபியன் கடற்பகுதியில் உள்ள ராம்சார் எனும் நகரில் உலகளாவிய சதுப்பு நிலங்களை பாதுகாக்கும் “ராம்சார் ஒப்பந்தம்” கையெழுத்தானது. இந்த ராம்சார் பட்டியலின் நோக்கம் முக்கியமான சதுப்பு நிலங்களை பராமரிப்பதாகும். ராம்சார் பட்டியலில் இணைவதன் மூலம் குறிப்பிட்ட பகுதிகள் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதப்படுகிறது.
தற்போது இந்த பட்டியலில் 5 இந்திய பகுதிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து கரிக்கிலி பறவைகள் சரணாலயம், பள்ளிக்கரணை காப்பு காடு, பிச்சாவரம் சதுப்புநில காடு ஆகியவையும் இதை தவிர மத்திய பிரதேசத்தில் உள்ள சாக்யா சாகர், மிசோரமில் உள்ள பாலா சதுப்பு நிலம் ஆகியவையும் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நாட்டில் உள்ள ராம்சார் தளங்களின் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளன