சர்வதேச வர்த்தகம் குறித்த பிரச்சினையை தீர்த்து வைக்க புதிய கட்டுப்பாட்டு மையத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.
சர்வதேச வர்த்தகம் குறித்து எந்த பிரச்சினையாக இருந்தாலும் அதை தீர்த்து வைக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு புதிய கட்டுப்பாடு மையத்தை உருவாக்கியுள்ளது. சர்வதேச நாடுகளுடன் வர்த்தகம் மேற்கொள்வதில் நிறைய சிக்கல்கள் இருப்பதாக புகார்கள் எழுந்த நிலையில், புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க, ஏற்றுமதி, இறக்குமதியில் உள்ள சிக்கலை தீர்ப்பது, லைசென்ஸ் பெறுவது போன்றவற்றை மேற்கொள்ள தனியாக கட்டுப்பாடு மையத்தை வர்த்தகத் துறை அமைச்சகம் உருவாக்கியுள்ளது.