சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடை செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த ஆண்டு முதல் பரவி வந்த தொற்று காரணமாக சர்வதேச விமான போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டது. தொடர்ந்து தொற்று குறையாமல் அதிகரித்துக் கொண்டு வந்ததால் சர்வதேச விமான சேவைக்கான தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது. பல நாடுகளில் இன்னும் தொற்று கட்டுக்குள் கொண்டு வராத காரணத்தினால் சர்வதேச விமானத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிப்பதாக விமானப் போக்குவரத்து இயக்குநரகம் இன்று அறிவித்துள்ளது.
இருப்பினும் சரக்கு விமான போக்குவரத்துக்கு எந்த தடையும் கிடையாது என்று தெரிவித்துள்ளது. ‘ஏா் பபுள்’ விதி முறைகளை கடைப்பிடித்து அமெரிக்கா, பிரிட்டன் ,பிரான்ஸ் ஆகிய 17 நாடுகளுக்கு இடையே ஒப்பந்தத்தின் அடிப்படையில் விமானங்கள் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.