நவம்பர் 30-ஆம் தேதி வரை சர்வதேச விமான சேவை ரத்து நீட்டிப்பு செய்துள்ளதாக சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டது.
கொரோனா பரவல் தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கடந்த மார்ச் 23-ஆம் தேதி முதல் உள்நாட்டு சர்வதேச விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. கடந்த மே மாதம் 25-ஆம் தேதி உள்நாட்டு விமான சேவை தொடங்கியது. ஆனால் வழக்கமான சர்வதேச விமான சேவை இன்னும் தொடங்கப்படவில்லை. வந்தே பாரத திட்டத்தின்கீழ் சிறப்பு விமானங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு இயக்கப்பட்டன.
இந்த நிலையில் அக்டோபர் 31-ஆம் தேதியுடன் முடிவடை சர்வதேச விமான சேவை ரத்து நடவடிக்கை நவம்பர் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் நேற்று இதற்கான அறிவிப்பை வெளியிட்டது. இருப்பினும் சர்வதேச சரக்கு போக்குவரத்து பாதிக்கப்படாது என்றும் தெரிவித்தது.