Categories
தேசிய செய்திகள்

“சர்வதேச விமான நிலையத்தில் கேம்பேகவுடா வெண்கல சிலை”… பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்…!!!!!

பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் கேம்பேவுடா வெண்கல சிலையை பிரதமர் மோடி திறந்து வைக்க இருக்கின்றார்.

பெங்களூர் கேம்பேவுடா சர்வதேச விமான நிலைய வளாகத்தில் கேம்பேவுடாவுக்கு 108 அடி உயரம் உடைய வெண்கல சிலை அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த சூழலில் அதன் திறப்பு விழா வருகிற 11-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு சிலையை திறந்து வைக்க இருக்கின்றார். இது பற்றி ஆதி சுஞ்சனகிரி மடாதிபதி நிர்மலானந்த நாத சுவாமியை உயர்கல்வித்துறை மந்திரி பெங்களூருவில் நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

இந்த விழாவை சிறப்பாக நடத்துவதற்கு தேவையான ஆலோசனைகளை அவர் கேட்டு பெற்று இருக்கின்றார். மேலும் அவர் 20கும் மேற்பட்ட ஒக்கலிகர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் இந்த சிலை திறப்பு பற்றி கர்நாடக முழுவதும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதை முதல் மந்திரி பசவராஜ் பொம்மை தொடங்கி வைக்க இருக்கின்றார். இந்த விழிப்புணர்வு பேரணி வெற்றி பெற வேண்டும் என பசவராஜ் பொம்மை உத்தரவிட்டிருப்பதாக மந்திரி அஸ்வந்த் நாராயணன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |