Categories
சினிமா

ரன்வீர் சிங் போல் போஸ் கொடுக்க விரும்பும் இன்னொரு நடிகர்…. யார் தெரியுமா?…. தைரியமாக வெளியிட்ட அறிவிப்பு….!!!!

பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிகை தீபிகா படுகோனின் கணவர் ஆவார். சமீபத்தில் ரன்வீர் சிங்கின் நிர்வாண புகைப்படம் இணையதளத்தில் வைரலாக பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் ரன்வீர் கடுமையாக விமர்சனத்திற்கு உள்ளாகினார். அதனைத் தொடர்ந்து இவருக்கு ஆதரவும் எதிர்ப்புகளும் கிளம்பியது. இதனையடுத்து ரன்வீர் மீது மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் ரன்வீர் சிங்குக்கு ஆடைகள் அனுப்பும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அதனைத் தொடர்ந்து விஷ்ணு விஷாலும் நிர்வாண புகைப்படம் ஒன்றை பகிர்ந்து உள்ளார். அது போட்டோ சூட் புகைப்படம் இல்லை என்றும் தூங்கி எழுந்ததும் எடுத்த போட்டோ என்றும் விளக்கம் அளித்துள்ளார். இந்நிலையில் நடிகர் விஜய்தேவர் கொண்டாவும் நிர்வாணம் போஸ் கொடுக்க தயார் என்று அறிவித்துள்ளார். சமீபத்தில் லைகர் படத்துக்காக விஜய் தேவர்கொண்டா கையில் பூங்கொத்தை வைத்து மறைத்தபடி நிற்கும் நிர்வாணம் புகைப்படம் வலைதளத்தில் சர்ச்சையை கிளப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |