தமிழகத்தில் அரசு மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் படிக்க விரும்புவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று உயர் கல்வித் துறை தெரிவித்திருந்தது. இதனையடுத்து மாணவர்கள் ஆன்லைன் மூலமாக கல்லூரி சேர்க்கை தொடங்கிய கொஞ்ச நேரத்திலேயே இணையதளம் முடங்கியுள்ளது. ஒரே நேரத்தில் ஏராளமானவர்கள் விண்ணப்பித்தால் www.tngasa.in என்ற இணையதளம் முடங்கியது.
இதனால் மாணவர்கள் விண்ணப்பிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். இது குறித்து விளக்கம் அளித்துள்ள உயர்கல்வித் துறை இணையதளம் சீராக ஒரு சில மணி நேரம் ஆகலாம் என்று கூறியுள்ளது.