Categories
உலகசெய்திகள்

“சர்வாதிகாரத்தை நிராகரி”… சீனாவில் ஜின் பிங்க்கு எதிராக வலுக்கும் போராட்டம்…!!!!!

சீனாவில் தற்போது கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருப்பதால் அங்கு போராட்டம் என்பதை எல்லாம் நினைத்துக் கூட பார்க்க முடியாது. ஆனால் தற்போது சீன மக்கள் எப்போதும் இல்லாத விதமாக வினோதமான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். அதிலும் குறிப்பாக ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி சீன அதிபர் ஜி ஜின்பிங் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற பதாகைகள் அந்த நாட்டின் தலைநகர் பீஜிங்கில் தொங்கவிடப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் கடைப்பிடித்து வரும் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கோவில் மற்றும் சர்வாதிகார ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பதாகைகளும் வைக்கப்பட்டுள்ளது.

அடையாளம் தெரியாத நபரால் இந்த பதாகைகள் தொங்கவிடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த பதாகைகள் கொண்ட புகைப்படங்களோடு அந்த நாட்டு வலைதளங்களில் என்ற ஹாஷ்டேக் ட்ரண்டாகியுள்ளது. இருப்பினும் இதற்கு காரணமானவர்கள் யார் என்று தகவல் தற்போது வரை வெளியாகவில்லை. இந்த நிலையில் மேம்பாலத்தில் தொங்கவிடப்பட்டிருந்த பேனரில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுங்கள் சர்வாதிகாரியும் தேசத் துரோகியமான ஜி ஜின்பிங் அகற்றுங்கள் என எழுதப்பட்டுள்ளது.

மேலும் பெரும்பாலான பொது இடங்களில் நிறுவப்பட்டிருக்கின்ற பாதுகாப்பு கேமராக்களின் ரேடாரின் கீழ்பெரும்பாலானது இருப்பதால் சீன ஆட்சிக்கு எதிராக எதிர்ப்பு தெரிவிக்கும் முக்கிய இடமாக குளியல் அறைகள் மாறி உள்ளது. பெய்ஜிங்கில் உள்ள சீனா பிலிம் ஆர்கைவ் ஆர்ட் சினிமாவில் உள்ள குளியலையில் சர்வாதிகாரத்தை நிராகரி என எழுதப்பட்டிருக்கின்ற கிராவிட்டி ஒன்று காணப்பட்டிருக்கிறது. மேலும் சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் இருபதாவது தேசிய காங்கிரஸ் பொதுக்கூட்டம் கிரேட் ஹால் ஆப் தி பீப்புள் அரங்கில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சுமார் 2300 நிர்வாகிகள் பங்கேற்றுள்ள இந்த கூட்டத்தின் முடிவில் சீனாவின் அதிபராக ஜின் பின் தொடர்ந்து மூன்றாவது முறையாக தேர்ந்தெடுப்பார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

Categories

Tech |