Categories
மாநில செய்திகள்

சர்வாதிகாரப் போக்கு…. இத்தகைய சம்பவத்தை பார்த்ததே இல்லை… திருச்சி சிவா ஆவேசம்…!!!

மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த ஜூலை 19ஆம் தேதி தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதல் பெகாசஸ் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் அவை முடங்கி வருகிறது. அதுமட்டுமில்லாமல் மாநிலங்களவை நிறைவடைய இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தேதி குறிப்பிடாமல் அவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆளும் அரசு முப்பத்தி ஐந்து மசோதாக்களை விவாதம் இன்றி நிறைவேற்றியுள்ளது என்று கூறிய திருச்சி சிவா எம்பி, இது ஆளும் அரசின் சர்வாதிகாரப் போக்கு என்றும், தனது இரண்டு கால நாடாளுமன்ற அனுபவத்தில் இப்படி ஒரு சம்பவத்தை பார்த்ததில்லை என்றும் கூறியுள்ளார். நாடாளுமன்றம் செயல்படாமல் இருந்ததற்கு எதிர்க்கட்சிகள் தான் காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் இதற்கு முற்றிலும் ஆளும் கட்சியை காரணம் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Categories

Tech |