Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சர்வீஸுக்கு விட்ட போது விபத்தில் சிக்கி சேதமான கார்…. உரிமையாளருக்கு ரூ.8 1/4 லட்சம் இழப்பீடு…. நீதிமன்றம் அதிரடி…!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள தம்பநாயக்கன்பட்டி பகுதியில் சௌந்தர்ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8 லட்ச ரூபாய்க்கு ஒரு காரை வாங்கியுள்ளார். இந்நிலையில் ஒரு ஆண்டு கழித்து சம்பந்தப்பட்ட கம்பெனியில் சௌந்தர்ராஜன் காரை சர்வீஸ் செய்ய விட்டிருந்த போது ஊழியர் காரை சோதனை ஓட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளார். அப்போது விபத்தில் சிக்கி கார் சேதமானதால் சௌந்தர்ராஜன் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதில் சேவை குறைபாட்டால் சேதமடைந்த காரை வாங்கி கொண்டு அதே மாடல் காரை தனக்கு வழங்க வேண்டும் அல்லது காரின் விலையை வட்டியுடன் சேர்த்து தர வேண்டும் என உத்தரவிட வலியுறுத்தி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள் சம்பந்தப்பட்ட கம்பெனி நிர்வாகத்தினர் சௌந்தர்ராஜனுக்கு வழக்கு செலவு தொகை 1 லட்ச ரூபாய் உள்பட மொத்தம் 8, 28, 477 ரூபாய் பணத்தை மனு தாக்கல் செய்த 2019-ஆம் ஆண்டு மே மாதத்திலிருந்து 6 சதவீத வட்டியுடன் சேர்த்து இரண்டு மாதங்களுக்குள் வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர்.

Categories

Tech |