Categories
தேசிய செய்திகள்

சர்வே சொல்லுது…. இவங்க லட்சணத்தை…. என்ன கொடுமை பாருங்களேன்….!!!

மத்திய அரசு தேசிய குடும்ப ஆரோக்கியம் குறித்த ஒரு சர்வே எடுத்து அதற்கான முடிவுகளை வெளியிட்டுள்ளது.

மத்திய அரசு ஒவ்வொரு ஐந்து ஆண்டிற்கும் தேசிய குடும்ப ஆரோக்கியம் குறித்த ஒரு சர்வே எடுத்து அதற்கான முடிவுகளை வெளியிடுகின்றது. இந்த சர்வே NFHS என அழைக்கப்படுகின்றது. இந்த சர்வே குறித்த முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் கடந்த 5 ஆண்டுகளில் குடிப்பழக்கம் உள்ள ஆண்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதேநேரத்தில் பெண்களின் குடிப்பழக்கம் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் இந்த அறிக்கையின்படி கடந்த  2015-ஆம் வருடம் முதல் 2016-ஆம் வருடம் வரையிலான அறிக்கையில் 15 வயதிற்கு அதிகமான பெண்கள் மது அருந்தும் பழக்கத்தில் 2.4 சதவீதமாக இருந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து தற்போது 2020-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டிற்கான அறிக்கையில் 4.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதே சமயத்தில் ஆண்களின் எண்ணிக்கை 39.3 சதவீதத்தில் இருந்து 28.8 சதவீதம் ஆக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. நகரங்களை விட கிராமங்களில் உள்ள மக்களுக்கு தான் குடிப்பழக்கம் அதிகமாக உள்ளது. மேலும் மதுப்பழக்கம் மட்டுமல்லாமல் புகையிலை பழக்கமும் பெண்களிடம் அதிகரித்துள்ளதாக இந்த அறிக்கை தெரிவித்துள்ளது. மேலும் இந்த அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Categories

Tech |