அர்ஜுன் தொகுத்து வழங்கும் சர்வைவர் நிகழ்ச்சியின் புதிய புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சர்வைவர் என்ற புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியை ஆக்சன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்க இருக்கிறார். இதுவும் கிட்டத்தட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி போல தான். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் ஒரு சிறிய தீவில் விடப்படுவார்கள். அங்கு அவர்களுக்கு பல டாஸ்குகள் கொடுக்கப்படும். ஒருவரோடு ஒருவர் போட்டியிட்டுக் கொண்டு இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்படாமல் தங்களை காத்துக் கொள்வதுதான் இந்த நிகழ்ச்சியின் விதிகள்.
https://www.youtube.com/watch?v=DUWLqDVjwXU&t=114s
இந்நிலையில் சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் 8 போட்டியாளர்களை அறிமுகப்படுத்தும் புதிய புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதன்படி இந்த நிகழ்ச்சியில் நடிகர் விக்ராந்த், நடிகர் நந்தா, நடிகர் உமாபதி ராமையா, நடிகை ஸ்ருஷ்டி டாங்கே, நடிகை விஜயலட்சுமி, நடிகை காயத்ரி ரெட்டி, தொகுப்பாளினி பார்வதி, நடன இயக்குனர் பெசண்ட் ரவி ஆகியோர் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர். மேலும் இந்த நிகழ்ச்சி வருகிற செப்டம்பர் 12-ஆம் தேதி முதல் தினமும் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது .