ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சி சர்வைவர். இந்த நிகழ்ச்சி ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு தீவில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கி வந்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் விக்ராந்த், நந்தா, பெசன்ட் ரவி, உள்ளிட்ட 18 பேர் பங்கேற்றனர். இந்த நிலையில் சர்வைவர் இறுதிப் போட்டியில் கலந்து கொண்ட போட்டியாளர்களின் வாக்குகள் அடிப்படையில் விஜயலட்சுமி இந்த போட்டியில் வெற்றி பெற்றார்.
போட்டியில் வெற்றி பெற்றதற்காக விஜயலட்சுமிக்கு 1 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. இதனால் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலர் விஜயலட்சுமிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் சர்வைவர் நிகழ்ச்சியின் வெற்றிக்கு பின்னர் நடிகை விஜயலட்சுமி தனக்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு தன்னுடைய நன்றியை தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடைய போட்டோ ஒன்றையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
அந்த போட்டோவில் விஜயலட்சுமி தன் பாதங்களை கேமராவிற்கு காட்டியபடி போஸ் கொடுத்துள்ளார். அதில் அவருடைய பாதங்கள் 2 மிகவும் நலமாக காட்சியளிக்கிறது. இதிலிருந்து அவர் அந்த நிகழ்ச்சியில் எவ்வளவு கஷ்டப்பட்டு உள்ளார் என்பது நமக்கு தெரிகிறது. மேலும் விஜயலட்சுமி அனைவருக்கும் ஒரு இன்ஸ்பிரேஷனாக இருப்பதாகவும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். தன்னுடன் விளையாடிய அத்தனை கடுமையான போட்டியாளர்களையும் ஓரம்கட்டி வெற்றிபெற்ற விஜயலட்சுமி ஒரு இரும்புப் பெண்மணி ஆகவே தெரிகிறார்.