சற்குணம் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கப்பட்டுள்ளது .
தமிழ் திரையுலகில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான களவாணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சற்குணம். இதை தொடர்ந்து இவர் வாகை சூடவா, நையாண்டி, சண்டிவீரன் போன்ற படங்களை இயக்கியிருந்தார். தற்போது இவர் அதர்வா கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தில் ஆஷிகா ரங்கநாத் கதாநாயகியாக நடிக்கிறார்.
#ProductionNo22 📽️shoot going on in full swing✨. Here are some Shooting spot Stills@Atharvaamurali #Rajkiran @realradikaa @SarkunamDir @GhibranOfficial #Viveka @editor_raja @logdop @RajAyyappamv @Lyricist_Vivek @itsme_bob @DoneChannel1 pic.twitter.com/2g4gFzTWFs
— Lyca Productions (@LycaProductions) August 4, 2021
மேலும் ராஜ்கிரண், ராதிகா சரத்குமார், சிங்கம்புலி, ஆர்.கே.சுரேஷ், பால சரவணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று தஞ்சாவூரில் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.