ஆந்திராவில் ஆற்றுப் பாலத்தை கடந்தபோது அரசு பேருந்து கவிழ்ந்ததில் 5 பெண்கள் உட்பட 9பேர் இறந்துள்ளனர்..
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் ஏலூர் அருகே சிறிய பாலத்தின் வழியாக அரசு பேருந்து சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற ஆற்றில் கவிழ்ந்துள்ளது. இதையடுத்து இதனை கண்ட அந்த பகுதி மக்கள் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். மீட்பு படையினர் அங்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்..
இதில் 5 பெண்கள் உட்பட 9பேர் பரிதாபமாக இறந்துள்ளனர்.. அந்த பேருந்தில் மொத்தம் 30 பேர் பயணித்துள்ளனர் என்று செல்லப்படுகிறது.. தற்போது வரை 9 பேர் உயிரிழந்துள்ளனர்.. மேலும் காயத்துடன் மீட்கப்பட்டவர்களுக்கு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து மீட்பு பணி நடைபெறுவதால் இன்னும் உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும் என தெரிகிறது..
https://twitter.com/Ashi_IndiaToday/status/1471024108804608001