புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. இந்த கனமழை மேலும் 3 நாட்களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதாவது, டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் நவம்பர் 10ஆம் தேதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்திருக்கிறது.. வானிலை ஆய்வு மையம் கணித்துள்ள மாவட்டங்களில் புதுக்கோட்டையும் ஒன்று…
இந்நிலையில் கனமழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என்று ஆட்சியர் கவிதா ராமு அறிவித்துள்ளார்.. கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு கருதி விடுமுறை என்று அவர் தெரிவித்துள்ளார்..