சொத்துக் குவிப்பு வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சசிகலா பெங்களூரில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் சசிகலாவின் உடல்நிலை மற்றும் சிகிச்சை குறித்து மருத்துவமனை நிர்வாகம் தற்போது ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், சசிகலாவுக்கு 6 நாட்களுக்கு பிறகு ரத்த அழுத்தம் மீண்டும் அதிகரித்துள்ளது. சசிகலாவுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு மாறுபட்டு வருவதாக விக்டோரியா மருத்துவமனை அறிக்கையில்குறிப்பிட்டுள்ளதது.
மேலும், சசிகலாவுக்கு ரத்தத்தில் சக்கரையின் அளவு 278ஆக இருப்பதால் இன்சுலின் மருந்து செலுத்தப்படுகின்றது. சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், சிகிச்சைக்கு உடல் ஒத்துழைப்பதாகவும் மருத்துமனை தகவல் தெரிவித்துள்ளது.