அதி கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து தமிழகத்தில் நாளை 12 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 9 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தென்காசி, பெரம்பலூர், தேனி, திண்டுக்கல், அறியலூர், தூத்துக்குடி, நெல்லை, புதுக்கோட்டை, விருதுநகர் மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல மதுரை, திருவாரூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
Categories