தமிழக சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மையத்தின் கூட்டணி அமைக்க காங்கிரஸுக்கு மக்கள் நீதி மையம் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த குழப்பம் நிலவி வருகிறது.
அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைத்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த சில நாட்களாகவே அதிமுக பல்வேறு நலத் திட்டங்களை மக்களுக்கு தொடர்ந்து செய்து வருகிறது. மேலும் மக்களை கவரும் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இதனை அடுத்து ஒவ்வொரு கட்சியினரும் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பற்றி தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணியை அமைக்க காங்கிரஸுக்கு மக்கள் நீதி மைய கட்சி அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து பேசிய அக்கட்சி பொதுச் செயலாளர் குமரவேல், மக்கள் நீதி மையம் கூட்டணிக்கு காங்கிரஸ் வந்தால் நல்லது. காங்கிரசுடன் வெவ்வேறு நிலைகளில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்றார். திமுக மற்றும் காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்து வரும் நிலையில், மக்கள் நீதி மையம் அழைப்பு விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.