கோவையில் கீர்த்திவாசன் என்ற மாணவர் நீட் தேர்வு முடிவு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிணத்துக்கடவு, முத்தூர் கிராமத்தில்கீர்த்தி வாசன் என்ற மாணவர் ஏற்கனவே இருமுறை நீட் தேர்வு எழுதியுள்ளார். அதில் தேர்ச்சி பெறாத நிலையில் இந்த வருடம் நீட் தேர்வு எழுதியுள்ளார்.
இதையடுத்து தேர்வு முடிவிற்கு பயந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வு காரணமாக தொடர்ந்து மாணவர்கள் உயிரிழந்து கொண்டிருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.