தமிழகத்தில் நீட் தேர்வால் மீண்டும் ஒரு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தை சேர்ந்த சுபாஷ் சந்திர போஸ் என்ற மாணவர் நீட் தேர்வு எழுதியுள்ளார். அதன் முடிவுகள் கடந்த வாரம் வெளியான நிலையில், மதிப்பெண் குறைந்ததால் மன அழுத்தத்தில் இருந்து உள்ளார். இதையடுத்து விஷம் குடித்து மாணவர் தற்கொலை செய்து கொண்டார். கடந்த 1ஆம் தேதி சுபாஷ் விஷமருந்திய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த போதிலும், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்ததாக கூறப்படுகிறது.நீட் தேர்வால் தமிழகத்தில் அடுத்தடுத்து மரணங்கள் நிகழ்ந்து கொண்டிருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Categories