Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சற்றுமுன்…. நெல்லையில் சோகம்…. காரை திறக்க முடியாமல் 3 குழந்தைகள் உயிரிழந்த பரிதாபம்..!!

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள லெப்பை குடியிருப்பில் காரில் விளையாடிய 3 குழந்தைகள் மூச்சுத்திணறி உயிரிழந்தனர்.

நெல்லை மாவட்டம் பணகுடி அருகேஇருக்கிறது லெப்பை குடியிருப்பு என்ற கிராமம். இந்த சிறிய கிராமத்தில் விளையாண்டு கொண்டிருந்த குழந்தைகள் 3 பேர் நீண்ட நாட்களாக பயன்படுத்தாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் ஏறி விளையாடியுள்ளனர்.. இதில் நித்திசா (7) நித்திஷ் (5) இருவரும் அண்ணன் தங்கைகள்.. அதேபோல கபிலன் என்ற 4 வயது குழந்தை.. இந்த  3  குழந்தைகளும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்குள் விளையாடி இருக்கிறார்கள்..

அந்த காரை பொருத்தவரை நீண்ட நாட்களாக அந்த இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த காரின் உள்ளே சென்ற குழந்தைகளால் கதவைதிறக்க முடியவில்லை.. அதே சமயம் காருக்குள் குழந்தைகள் சென்றதை யாரும் கவனிக்கவில்லை.. 4 மணியளவில் குழந்தைகளின் தாயார் விளையாடுவதை பார்த்திருக்கிறார்.. ஆனால் காருக்குள் சென்றதை கவனிக்கவில்லை.. நீண்ட நாட்களாக பூட்டப்பட்டிருந்ததால் குழந்தைகளால் திறக்க முடியவில்லை..

இதனிடையே  பெற்றோர்கள் குழந்தையை காணவில்லை என்று நீண்ட நேரம்தேடியுள்ளனர். அதன் பிறகு சில நிமிடங்களுக்கு முன் தான் காரின் அருகே சென்று பார்த்துள்ளனர். காரை திறந்து பார்த்தபோது மயங்கிய நிலையில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.. இதில் ஒரு குழந்தையை வெளியே எடுக்கும்போது வாந்தி  எடுத்துள்ளது. உடனே அருகே உள்ள பணகுடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனாலும் சிகிச்சை பலன் இல்லாமல் குழந்தை இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதேபோன்று கடந்த 3 வருடங்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் ஒரு சம்பவம் நடந்தது. இதில், நீண்ட நாட்களாக பூட்டப்பட்டிருந்த காரில் சிக்கி 4  குழந்தைகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

 

Categories

Tech |