மத்திய பிரதேச மாநிலத்தில் பேருந்து ஒன்று கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 42 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் சிதி என்ற பகுதியில் உள்ள கால்வாயில் 52 பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அங்கு உள்ள கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. உடனே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர். தற்போது வரை 42 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்தை அடுத்து உள்துறை அமைச்சர் அமித் ஷா காணொலி காட்சி வாயிலாக பங்கேற்க இருந்த நிகழ்ச்சியை மாநில அரசு ரத்து செய்தது. இந்த விபத்து பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதில் உயிரிழந்தோருக்கு 5 லட்சம் இழப்பீடாக வழங்க மத்திய பிரதேச மாநில முதல்-மந்திரி அறிவித்துள்ளார். இந்த விபத்து குறித்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மீதம் உள்ள நபர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். 42 பேர் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.