Categories
அரசியல் மாநில செய்திகள்

சற்றுமுன் பரபரப்பு: சத்தியம் வாங்கிய ஈபிஎஸ்- ஓபிஎஸ்…!!!

அதிமுக நிர்வாகிகள் யாரும் சசிகலாவை சந்திக்க கூடாது என ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் சத்தியம் வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா, தனது 4 ஆண்டுகள் சிறை வாசத்தை முடித்து கடந்த ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார்.

அவரின் வருகை தமிழக அரசியலில் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்துமா என்று அனைவரும் குழப்பத்தில் உள்ளனர். இந்நிலையில் ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

சில அமைச்சர்கள் சசிகலாவை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியானதை சுட்டிக்காட்டி, யாரும் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவிக்க கூடாது. தேர்தல் நேரத்தில் வைட்டமின் பி (பணம்), சீட் என்று எல்லா சலுகையும் கொடுக்கப்படும். முழுமையாக அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் சத்தியம் வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |