திருவண்ணாமலையில் வருவாய்த்துறை ஆய்வாளர்கள் மீது திடீரென்று பாஜகவை சேர்ந்த பிரமுகர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலையில் துரிஞ்சாபுரம் வருவாய் ஆய்வாளர் ஷாயாஜி பேகம் மற்றும் கிராம நிர்வாக அதிகாரிகள் ஜெயக்குமார் திடீரென்று அப்பகுதியை சேர்ந்த பாஜக பிரமுகர்கள் ரகுநாதன், சக்திவேல் ஆகியோரை உருட்டுக்கட்டையால் தாக்கியுள்ளனர். இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ரகுநல்தன் மற்றும் சக்திவேல் ஆகியோரை கைது செய்துள்ளனர்.
மேலும் இந்த தாக்குதலில் காயமடைந்த வருவாய் ஆய்வாளர் ஷாயாஜி பேகம் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் எதன் காரணமாக நடைபெற்றது என்று காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.