Categories
மாநில செய்திகள்

சற்றுமுன் பரபரப்பு: மாஸ்க் அணிய தடை – தமிழகத்தில் அதிரடி…!!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ளன. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரசாரத்தை தீவிரமாக தொடங்கி வ்ருகின்றனர்.  இந்நிலையில் தமிழகத்தில்  தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று சென்னை வந்தடைந்தார். மோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சி நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.

இந்நிலையில் நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் கருப்பு நிற மாஸ்க் அணிய காவல்துறையினர் தடை விதித்துள்ளனர். ஏற்கனவே #GoBackModi என மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் கருப்பு நிற மாஸ்க் நேரடியாக எதிர்ப்பு தெரிவிக்கும்படி இருக்கும் என்பதால் மாஸ்க்கை அகற்ற அறிவுறுத்தியுள்ளனர்.

Categories

Tech |