நடிகை ஓவியா ட்விட்டர் பக்கத்தில் பாஜகவினருக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னையில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி சென்னைக்கு வந்தார். அப்போது அங்கு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன்பிறகு பல்வேறு நலத்திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார். இந்நிலையில் பிரதமர் வருகையை ஒட்டி நடிகை ஓவியா #Gobackmodi இன்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு எதிர்ப்பு தெரிவித்தார். அதன் மூலம் ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனத்தையும் நடிகை ஓவியா இழுத்துள்ளார்.
அதனால் அவர் மீது பாஜகவினர் புகார் அளித்துள்ளனர். சமூக வலைதளங்களிலும் அவர் மீது கடுமையான விமர்சனங்கள் எழுகின்றன. இதற்கு ஓவியா ஆர்மி பதிலடி கொடுத்தது. இதையெல்லாம் சைலண்டாக பார்த்துக்கொண்டிருந்த ஓவியா, சற்று முன் திடீரென்று ஜெய்ஹிந்த்! கருத்து சுதந்திரம்! என்று ட்விட்டரில் பாஜகவினருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.