Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

சற்றுமுன்…! புதுச்சேரி, காரைக்காலில் 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை..!!

புதுச்சேரி, காரைக்காலில் 2 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில தினங்களாக பெய்து வருகிறது. அதன்படி புதுச்சேரியில் இன்று அதிகாலை முதல் கனமழை மாநிலம் முழுவதும் பெய்து வருகின்றது. நகரப் பகுதி, கிராம பகுதியில் மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக புதுச்சேரியில் முக்கிய வீதிகள், முக்கிய பகுதிகளில் தண்ணீர் தேங்கி பொது மக்களுடைய வாகனம் செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த நிலையில் நாளை (04.11.2022) நாளை மறுநாள் (05.11.202) இரு நாட்களும் விடுமுறை அளித்து கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார்.. புதுச்சேரியில் 5 நாட்கள் கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஏற்கனவே புதுச்சேரி, காரைக்காலில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |