Categories
தேசிய செய்திகள்

சற்றுமுன்…. மத்திய அரசுக்கு எதிராக போராட்டம்….. ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கைது…!!

விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளை கண்டித்து போராட்டம் நடத்திய ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி  உட்பட காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விலைவாசி உயர்வு, அடிப்படை பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி விதிப்பை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், நாட்டின் பண வீக்கம் என்பது தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்களை எழுப்பி இன்றைய தினம் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் என்பது நடைபெற்று வருகிறது. அதன்படி டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்து மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் முழக்கங்களை எழுப்பினர்.

இதையடுத்து நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து பேரணியாக குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி சென்ற நிலையில் காவல்துறையினர் ராகுல் காந்தி உள்ளிட்டவர்களை தடுத்து நிறுத்தி உங்களுடைய போராட்டம் காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது, எனவே உடனடியாக கலைந்து செல்ல வேண்டும் இல்லை என்றால் கைது செய்யப்படுவீர்கள் என்று தெரிவித்தார்கள்..

கிட்டத்தட்ட 20 நிமிடத்திற்கு மேலாக ராகுல் காந்தி உள்ளிட்டோர் இந்த பகுதியிலேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். முதல் கட்டமாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாக்கூர் கைது செய்யப்பட்ட நிலையில், கடைசியாக ராகுல் காந்தியையும் காவல்துறையினர் கைது செய்து தடுப்பு காவலில் அடைத்து செல்கின்றனர். அதனைத்தொடர்ந்து தற்போது பிரியங்கா காந்தியும் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று மாலை தான் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள் என தெரிகிறது.

Categories

Tech |