உத்தரகாண்ட் முதல்வர் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தின் முதல்வர் தேவேந்திர சிங் ராவத், தனது பதவியை ராஜினாமா செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவருக்கு எதிராக பாஜக எம்எல்ஏக்கள் ஒரு தரப்பினர் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி வந்த நிலையில், திடீரென்று அவர் ராஜினாமா செய்துள்ளார். இது பாஜகவுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. பாஜகவை சேர்ந்த இவர் மார்ச் 18, 2017 ஆம் ஆண்டு உத்தரகாண்ட் மாநிலத்தின் முதல்வராக பதவியேற்றார்.அதன் பிறகு மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து சிறப்பாக பதவி வகித்து வந்தார். இந்நிலையில் அவர் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.